/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஓடையில் மருத்துவக்கழிவு... சுகாதாரக்கேடுடன் தீர்த்தக்கிணறு
/
ஓடையில் மருத்துவக்கழிவு... சுகாதாரக்கேடுடன் தீர்த்தக்கிணறு
ஓடையில் மருத்துவக்கழிவு... சுகாதாரக்கேடுடன் தீர்த்தக்கிணறு
ஓடையில் மருத்துவக்கழிவு... சுகாதாரக்கேடுடன் தீர்த்தக்கிணறு
ADDED : ஆக 12, 2024 11:49 PM

சுகாதாரக்கேடுடன் ஞானதீர்த்தம் கிணறு
திருமுருகன்பூண்டி திருமுருகநாதர் கோவில் ஞானதீர்த்தம் கிணற்றில், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, தீர்த்தம் பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறி வருகிறது.
- ராஜகோபால், பூண்டி. (படம் உண்டு)
கஸ்துாரிபாய் நகரில்
இரவு நேர மின்வெட்டு
பெருமாநல்லுார், கணக்கம்பாளையம் பிரிவு, கஸ்துாரிபாய் நகரில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. இரவு நேர மின்வெட்டு தொடர்கிறது.
- பழனிசாமி, கஸ்துாரிபாய் நகர்.
சேர்மன் கந்தசாமி நகர்
வீதிகளில் இடையூறு
திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, பாளையக்காடு, சேர்மன் கந்தசாமி நகர் இரண்டு வீதிகளிலும் கட்டுமான பொருட்கள் இடையூறாக கொட்டி வைக்கப்பட்டுள்ளதால், பள்ளிக்கு வாகனங்களில் செல்ல இடையூறாக உள்ளது.
- நித்தியானந்தன், பாளையக்காடு.
பல்லாங்குழி சாலையில்
தடுமாறும் வாகனங்கள்
திருப்பூர், கல்லாங்காடு, நால் ரோடு சந்திப்பில் சாலை குழியாக உள்ளது. வாகன ஓட்டிகள் தடுமாறி விழுகின்றனர். குழியை மூட வேண்டும்.
- செல்வராஜ், பல்லடம் ரோடு. (படம் உண்டு)
கோவில் வீதியில்
எரியாத விளக்கு
திருமுருகன்பூண்டியை அடுத்த, பெரியாயிபாளையம், காமராஜ்நகர், ஆதிமூல கணபதி கோவில் வீதியில் தெருவிளக்கு எரிவதில்லை.
- ஆறுமுகம், பெரியாயிபாளையம். (படம் உண்டு)
வடக்கு உழவர் சந்தை
வழி முழுக்க ஆக்கிரமிப்பு
திருப்பூர், பி.என்., ரோடு, வடக்கு உழவர் சந்தை செல்லும் வழியில் போக்குவரத்துக்கு இடையூறாக ஆக்கிரமிப்பு வாகனங்கள் நிறுத்தப்படுகிறது.
- உமாசங்கர், பி.என்., ரோடு (படம் உண்டு)
தாழ்வான மின்கம்பி
உரசினால் அபாயம்
திருப்பூர், பல்லடம் ரோடு, தென்னம்பாளையத்தில் மின்கம்பிகள் தாழ்வாக உள்ளன. அதிக பாரம் ஏற்றி உயரத்துடன் வரும் வாகனங்கள் உரசி விட வாய்ப்புள்ளது.
- செல்வம், தென்னம்பாளையம். (படம் உண்டு)
ஓடையில் கொட்டப்படும்
மருத்துவக்கழிவுகள்
திருப்பூர், எஸ்.வி., கார்டன் பகுதியில் ஓடையில் குப்பை, மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுகிறது. மாநகராட்சி அதிகாரிகள் கண்காணிப்பதும், கண்டுகொள்வதில்லை.
- பிரமிளா, எஸ்.வி., கார்டன். (படம் உண்டு)
மழைநீர் தேங்கிய
சாலையின் அவலம்
திருப்பூர், காங்கயம் ரோடு, மணியகாரம்பாளையம் - ஜெய் நகர் - ராக்கியாபாளையம் பிரிவு ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. மழைநீர் தேங்கி நிற்பதால், வாகன ஓட்டிகள் சிரப்படுகின்றனர். ரோடு போட வேண்டும்.
- வரதராஜன், ராக்கியாபாளையம் பிரிவு. (படம் உண்டு)
சாலை மோசம்
செல்வதோ சிரமம்
திருப்பூர், லட்சுமிநகர், பிரிட்ஜ்வே காலனி சந்திப்பு, விநாயகர் கோவில் முன் ரோடு குண்டும் குழியுமாக உள்ளது. வாகன ஓட்டிகள் தடுமாறுகின்றனர்.
- ஐயப்பன், லட்சுமிநகர். (படம் உண்டு)
வீணாகும் தண்ணீர்
சாலை குழியானது
திருப்பூர், கொங்கு மெயின் ரோடு, இரண்டாவது ரயில்வே கேட் சந்திப்பில், குழாய் உடைந்து நாள் முழுதும் தண்ணீர் வீணாகிறது. சாலையே குழியாகி விட்டது.
- கணபதி ராஜேந்திரன், கொங்குமெயின்ரோடு. (படம் உண்டு)
ஹார்வி ரோடு
குளமாகிறது
திருப்பூர் ரயில்வே மேம்பாலம் பின், ஹார்வி ரோடு குழியாக உள்ளது. மழை பெய்யும் போதெல்லாம் தண்ணீர் தேங்கி நிற்கிறது. 'பேட்ஜ்ஒர்க்' மேற்கொள்ள வேண்டும்.
- மோகன்குமார், ஹார்வி ரோடு. (படம் உண்டு)
ரியாக் ஷன்
சாலை மட்டம்
சரிசெய்ய தீவிரம்
திருப்பூர், 6வது வார்டு, நல்லாத்துப்பாளையத்தில் பாதாள சாக்கடை மூடியை விட உயரமாக சாலை இருப்பதாக 'தினமலர்' செய்தி வெளியானது. அதை சரிசெய்யும் பணியை துவக்கியுள்ளனர்.
- உதயகுமார், நல்லத்துப்பாளையம். (படம் உண்டு)
கால்வாய் அடைப்பு
சீர் செய்யப்பட்டது
திருமுருகன்பூண்டி ரிங் ரோடு, நெசவாளர் காலனி ஸ்டாப் அருகே கால்வாய் அடைப்பு குறித்து 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இப்போது கால்வாய் அடைப்பு சீர்செய்யப்பட்டது.
- மனோகரன், நெசவாளர் காலனி. (படம் உண்டு)