ADDED : மே 06, 2024 11:28 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்;திருப்பூர் மாநகராட்சியின், 55வது வார்டு, பெரிச்சிபாளையம், கருணையம்மாள் லே - அவுட் குடியிருப்போர் நலசங்கம் சார்பில், குழந்தைகளுக்கான ஓவியப்போட்டி நடந்தது.
வணிகர் தினம் மற்றும் திருப்பூர் நகருக்கு பனியன் தொழிலை கொண்டு வந்த, காதர்பாய் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. சிறுவர், சிறுமியருக்கு ஓவியப்போட்டி நடத்தி, பரிசு வழங்கப்பட்டது. ஸ்கூல் பாயின்ட் நிறுவனம் சார்பில், சமூக ஆர்வலர் ரஜினி சுப்பிரமணியம் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசு வழங்கினார்.