/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நள்ளிரவு வினியோகம்; குடிநீருக்கு சிக்கல்
/
நள்ளிரவு வினியோகம்; குடிநீருக்கு சிக்கல்
ADDED : ஆக 19, 2024 11:44 PM

நேரத்தை மாற்றுங்கள்
திருப்பூர் இரண்டாவது மண்டலத்துக்கு உட்பட்ட, கணேசபுரம், கருணாகரபுரி, சஞ்சய் நகர், ஆர்.எஸ்., புரம் பகுதிகளுக்கு நள்ளிரவு, 12:00 மணி முதல் அதிகாலை 4:00 மணி வரை குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. பெரும்பாலானோர் குடிநீர் பிடிக்க முடியாமல் போகிறது. குடிநீர் வினியோக நேரத்தை மாற்ற வேண்டும்.
- ராணி, கருணாகரபுரி.
கடைக்குள் கழிவுநீர்
திருப்பூர், புது மார்க்கெட் வீதியில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டுள்ளது. ஓராண்டாக சரிசெய்யவில்லை. மழை பெய்யும் போதெல்லாம், கழிவுநீர் வெளியேறி கடைகளுக்குள் வந்து விடுகிறது. சரிசெய்ய வேண்டும்.
- சதீஷ், புது மார்க்கெட் வீதி. (படம் உண்டு)
குழாய் உடைப்பு
திருப்பூர், இளங்கோ நகர் இரண்டாவது வீதியில் குழாய் உடைந்துள்ளது. வினியோகிக்கும் போது தண்ணீர் பிடிக்க வழியில்லை. குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.
- குணசேகரன், இளங்கோ நகர். (படம் உண்டு)
பல்லாங்குழி சாலை
பூலுவபட்டி நால்ரோடு சிக்னல் சந்திப்பில் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. வாகன ஓட்டிகள் தடுமாறி விழுகின்றனர். 'பேட்ஜ் ஒர்க்' மேற்கொள்ள வேண்டும்.
- முரளி, பூலுவபட்டி. (படம் உண்டு)
கால்வாய் அடைப்பு
திருப்பூர், 57வது வார்டு, அம்மன் நகரில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் வெளியேற வழியில்லாமல் தேங்கியுள்ளது. சுத்தம் செய்ய வேண்டும்.
- ஜீவா, அம்மன் நகர். (படம் உண்டு)
எரியாத விளக்கு
திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, முதல் ரயில்வே கேட் முதல் இரண்டாவது ரயில்வே கேட் வரை தெருவிளக்குகள் எரிவதில்லை. எரியாத விளக்குகளை மாற்றி, புது விளக்கு பொருத்த வேண்டும்.
- கார்த்திகேயன், ஊத்துக்குளி ரோடு. (படம் உண்டு)
எப்படிப் பயணிப்பது?
திருப்பூர், கோல்டன் நகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி அருகே, ரயில் பாலத்தின் கீழ் அடைப்பால் கழிவுநீர் தேங்கியுள்ளது. பாதசாரிகள் கூட சென்று வர முடியாத நிலை உள்ளது. மாநகராட்சி கவனிக்க வேண்டும்.
- தமிழ்ச்செல்வன், கோல்டன் நகர். (படம் உண்டு)
மழைநீர் தேக்கம்
திருப்பூர், 32வது வார்டு, எம்.ஜி.ஆர்., நகர் - ஐஸ்வர்யா காலனி செல்லும் வழியில் மழைநீர் வழிநெடுக தேங்கியுள்ளது. மழைநீரை வெளியேற்றி ரோடு போட வேண்டும்.
- சூர்யா குமார், எம்.ஜி.ஆர்., நகர். (படம் உண்டு)
ரியாக் ஷன்
சீரானது உடைப்பு
திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, எஸ்.ஆர்.சி., மில் ஸ்டாப்பில், குழாய் உடைந்து தண்ணீர் வீணானது குறித்து, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. குழாய் உடைப்பு மாநகராட்சி மூலம் சீரமைக்கப்பட்டுள்ளது.
- சங்கர், எஸ்.ஆர்.சி., மில் ஸ்டாப். (படம் உண்டு)
திருப்பூர், மங்கலம் ரோடு, கருவம்பாளையத்தில் குழாய் உடைந்து தண்ணீர் வீணானது. 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியான பின், உடைப்பு சரிசெய்யப்பட்டுள்ளது.
- ராஜா, கருவம்பாளையம். (படம் உண்டு)

