/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குறுமைய ஹாக்கி போட்டி 'சென்சுரி' பள்ளி சாம்பியன்
/
குறுமைய ஹாக்கி போட்டி 'சென்சுரி' பள்ளி சாம்பியன்
ADDED : ஆக 30, 2024 10:47 PM

திருப்பூர்:திருப்பூர் சென்சுரி பவுண்டேசன் மெட்ரிக் பள்ளியில் தெற்கு குறுமைய ஹாக்கிப்போட்டி நடந்தது. மாணவர் இறுதிப்போட்டி 14 வயது பிரிவில் கிட்ஸ் கிளப் பள்ளியையும், 17 வயது பிரிவில் எம்.என்.சி.சி., பள்ளியையும், 19 வயது பிரிவில் கிட்ஸ் கிளப் பள்ளியையும் சென்சுரி பவுண்டேசன் பள்ளி வாகை சூடியது.
மாணவியர் இறுதிப்போட்டி 14 மற்றும் 17 வயது பிரிவில் பிரன்ட்லைன் பள்ளியை சென்சுரி பள்ளி வீழ்த்தியது. 19 வயது பிரிவில் சென்சுரி பள்ளி இரண்டாமிடம் பெற்றது. அதிக வெற்றிகளைக் குவிந்த சென்சுரி பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தைத் தட்டிச் சென்றது. ஹாக்கிப் பயிற்சியாளர் பாலசுப்ரமணியனையும், பள்ளி ஹாக்கி அணி வீரர், வீராங்கனையரையும் பள்ளி தாளாளர் டாக்டர் சக்திதேவி, முதல்வர் ெஹப்சிபா பால் உள்ளிட்டோர் வாழ்த்தினர்.