/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அதிசயம்! சூரியனை சுற்றி ஒளிவட்டம் பொதுமக்கள் கண்டுகளித்தனர்
/
அதிசயம்! சூரியனை சுற்றி ஒளிவட்டம் பொதுமக்கள் கண்டுகளித்தனர்
அதிசயம்! சூரியனை சுற்றி ஒளிவட்டம் பொதுமக்கள் கண்டுகளித்தனர்
அதிசயம்! சூரியனை சுற்றி ஒளிவட்டம் பொதுமக்கள் கண்டுகளித்தனர்
ADDED : செப் 09, 2024 11:35 PM

திருப்பூர்:நேற்று மதியம், சூரியனை சுற்றி ஒரு ஒளிவட்டம் தெரிந்ததை பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் அதிசயத்துடன் பார்த்து மகிழ்ந்தனர்.
திருப்பூர் மாநகரம் உள்ளிட்ட சுற்றுவட்டாரத்தை பல பகுதிகளில் நேற்று மதியம், 1:40 முதல், 2:30 மணி வரை என, ஒரு மணி நேரம் வானில் சூரியனை சுற்றி ஒரு வளையம் தோன்றியது. இதனைப் பார்த்த குழந்தைகள், பொதுமக்கள் என பலரும் அதிசயத்துடன் வானத்தை உற்றுநோக்கி பார்த்தனர். பலரும் தங்களது மொபைல் போனில், இந்த அதிசயத்தை படம் பிடித்தனர்.
இதுகுறித்து கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான் கூறியதாவது:
இது ஹாலோஸ் என்று அழைக்கப்படுகின்ற ஒரு வெள்ளை வளையமாக சூரியனை அல்லது சந்திரனை சுற்றி காணப்படுகிறது. சில நேரங்களில் ஒரு வானவில்லாக காணப்படும். முக்கியமாக சூரியனுடன் நடக்கிறது. மிக உயரமான சிரஸ் மேகங்கள் பெரும்பாலும் பனி படிகங்களால் ஆனவை.
இவை, 20 ஆயிரம் அடி உயரத்தில் இருக்கும். அவற்றில் சூரிய ஒளி படும் போது, ஒரு முப்பட்டகம் போலவே பிரதிபலித்து ஒளிவீசும். பிரதிபலிப்பு மற்றும் சிதறல் ஆகியவற்றால் சூரிய ஒளிவட்டம் ஏற்படுகிறது. வானவில் ஒரு பகுதி வட்டம் அல்லது வளைவாக காணப்படுகிறது.
மேலும், ஒளிவட்டத்தை சுற்றியுள்ள வானம் மற்ற வானங்களை விட இருண்டதாக இருப்பதை கவனிக்க வேண்டும். இது போன்ற நிகழ்வு சாதாரணமாக நடக்க கூடியதே. நாம் பார்த்து ரசிக்கலாம். வெறும் கண்ணால் நீண்ட நேரம் பார்க்க கூடாது என்பதை கவனத்தில், பெரியவர்கள், குழந்தைகள் நினைவில் வைத்து கொள்வது அவசியம்.
இவ்வாறு, அவர் கூறினார்.
---
சூரியனை சுற்றி நேற்று மதியம் தெரிந்த ஒளிவட்டம்: ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்பாள் கோவில், ராக்கியாபாளையம்.

