/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சீசன் காலத்திலும் சரியாத முருங்கை விலை
/
சீசன் காலத்திலும் சரியாத முருங்கை விலை
ADDED : ஜூலை 21, 2024 12:26 AM
பொங்கலுார்:முருங்கையில் செடி முருங்கை, மர முருங்கை, கரும்பு முருங்கை போன்ற ரகங்கள் உள்ளன.
பங்குனி மற்றும் ஆடி மாதம் முருங்கைக்கு சீசன் காலமாகும். இந்த சீசனில் அபரிமிதமாக முருங்கை காய்க்கும். தேவையை விட உற்பத்தி அதிகரிப்பதால் விலை சரியும். சீசன் காலத்தில் ஒரு கிலோ பத்து ரூபாய்க்கும் குறைவாகவே விலை போகும்.
தற்போது ஆடி மாதம் பிறந்துள்ளது. ஆடியில் முருங்கை விலை சரிந்திருக்க வேண்டும். ஆனால் விலை உச்சத்தில் உள்ளது. ஒரு கிலோ அதிகபட்சமாக, 80 ரூபாய் வரை விலை போகிறது.
முருங்கை அதிக அளவில் சாகுபடி நடக்கும் திருப்பூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் போதிய மழை இல்லாதது, காலநிலை மாற்றம் போன்றவற்றால் முருங்கை வரத்து குறைவாக உள்ளது.
இதுவே முருங்கை விலை உச்சம் தொடக் காரணமாகும். இன்னும் சில வாரங்களில் முருங்கை அறுவடை துவங்கும்; அப்போது விலை சரிய வாய்ப்புள்ளது.