/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
டூவீலர் ஸ்டாண்ட் திறக்க வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு
/
டூவீலர் ஸ்டாண்ட் திறக்க வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு
டூவீலர் ஸ்டாண்ட் திறக்க வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு
டூவீலர் ஸ்டாண்ட் திறக்க வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு
ADDED : மார் 08, 2025 11:24 PM

திருப்பூர்: திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் வாகனம் நிறுத்த இடையூறு ஏற்பட்டு வருவதால், பார்க்கிங் பகுதியை விரிவுபடுத்தி, கூடுதல் வாகனம் நிறுத்தும் வசதியுடன் மறுகட்டமைப்பு செய்யும் பணி, கடந்தாண்டு துவங்கியது.
நிழற்குடையுடன் கூடிய வகையில் டூவீலர் ஸ்டாண்ட் கட்டும் பணி, 80 சதவீத முடிந்துள்ளது. தரைத்தள பணிகள் ஓரளவு நிறைவு தருவாயை எட்டியுள்ளது.
ரயில்வே ஸ்டேஷனுக்கு தினசரி, 200க்கும் அதிமானோர் டூவீலரில் வந்து, வாகனத்தை ஸ்டாண்டில் நிறுத்தி விட்டு ரயிலில் பயணிக்கின்றனர். புதிய டூவீலர் ஸ்டாண்ட் திறக்காததால், வாகனங்களை நிறுத்த இடையூறு ஏற்படுகிறது.
ஆகையால், பணிகளை விரைந்து முடித்து, புதிய டூவீலர் ஸ்டாண்ட் திறக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.