ADDED : மே 06, 2026 07:31 PM
திருப்பூர்: திருப்பூர், வஞ்சிபாளையம் தபால் அலுவலகம் எதிரே உள்ள பிரதான சாலையில் பதிக்கப்பட்ட குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள நீர் கசிவு காரணமாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.அப்பகுதியினர் கூறுகையில், ‘கடந்த சில மாதங்களுக்கு முன் இதே பகுதியில் குழாயில் கசிவு ஏற்பட்டது.
புகார் அளித்ததன் பேரில், சீரமைத்தனர். ஆனால், சீரமைப்பு பணிகள் தரமற்ற முறையில் செய்யப்பட்டதன் விளைவாக, தற்போது அதே இடத்தில் மீண்டும் கசிவு ஏற்பட்டு சாலை முழுவதும் நீர் வழிந்தோடுகிறது. சாலையின் நடுவே தண்ணீர் தேங்குவதால் அந்த இடம் சேறும் சகதியுமாக மாறியுள்ளது. போதிய வெளிச்சம் இல்லாததால், இரவில் டூவீலரில் வருபவர்கள் விபத்துக்குள்ளாகின்றனர். இப்பகுதி வழியாகச் செல்லும் கனரக வாகனங்களால் சாலையில் பள்ளம் மேலும் அதிகரித்து வருகிறது. சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.
