தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கல்வி மேம்பாட்டுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்

கல்வி மேம்பாட்டுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்

கல்வி மேம்பாட்டுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்


ADDED : ஆக 27, 2024 11:07 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 27, 2024 11:07 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்;திருப்பூர், கண்டியன்கோவில் பகுதியில் உள்ள ஸ்ரீ அலகுமலை முருகன் டிரஸ்ட் நடத்தும் ஸ்ரீ அலகுமலை வித்யாலயா பள்ளி மற்றும் இந்திய பொதுத்துறை நிறுவனமான, தேசிய அனல் மின் கழகம் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

கிராமப்புற மாணவர்களின் கல்வி மற்றும் விளையாட்டு மேம்பாட்டிற்காக கையெழுத்தாகியுள்ள இந்த ஒப்பந்தத்தில், புதிய நவீன ஆய்வகங்கள், விளையாட்டு பயிற்சி மையம் ஆகியவை முதன்மைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக, 3.75 கோடி ரூபாயை, தேசிய அனல்மின் கழகம் வழங்கியுள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் காயங்குளம், கேரளா பொது மேலாளர் சிவகுமார் ராம், ஸ்ரீ அலகுமலை வித்யாலயா பள்ளி தாளாளரும், அறக்கட்டளை உறுப்பினருமான செந்தில் ஆகியோர் கையெழுத்திட்டனர். தேசிய அனல் மின் கழக துணை மேலாளர் பாலகிருஷ்ணன், மேலாளர் லிங்கம்மடாசு உள்ளிட்ட அதிகாரிகள், ஸ்ரீ அலகுமலை முருகன் டிரஸ்ட் உறுப்பினர்கள் அண்ணாதுரை, அனந்தராமன் மற்றும் பள்ளி முதல்வர் சீனிவாசன் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us