/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வளர்ச்சி திட்ட பணிகள் அடிக்கல் நாட்டிய எம்.பி.,
/
வளர்ச்சி திட்ட பணிகள் அடிக்கல் நாட்டிய எம்.பி.,
ADDED : ஜூலை 14, 2024 12:50 AM
அவிநாசி;நீலகிரி எம்.பி., ராஜா, அவிநாசி ஒன்றிய ஊராட்சி பகுதிகளில் பல்வேறு திட்ட பணிகளை துவக்கி வைத்து நன்றி அறிவிப்பு கூட்டங்களில் கலந்து கொண்டார்.
பொங்கலுார் ஊராட்சி, பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில், ஏ.ஜி.ஏ.எம்.டி., திட்டத்தில், 14.31 லட்சத்தில், கட்டப்பட்ட அங்கன்வாடி மையம், பாப்பாங்குளம் ஊராட்சி, அழகாபுரிநகரில், 15வது பொதுநிதிக்குழு மானியத் திட்டத்தில், 11.50 லட்சம் ரூபாயில் கட்டப்பட்ட ரேஷன் கடை ஆகியவற்றைஎம்.பி., ராஜா திறந்து வைத்தார்.
அதன்பின், திருமுருகன்பூண்டி - ராக்கியாபாளையம் பகுதி, பாலாஜி நகர் மற்றும் துரைசாமி நகரில், தலா, 3 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்ட அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து, பொங்கலுார், கானுார், தண்டுக்காரன்பாளையம், தத்தனுார், அம்மாபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நன்றி அறிவிப்பு கூட்டமும், அவிநாசி - சீனிவாசபுரம் பகுதி, சேவூர் ரவுண்டானா மற்றும் பூண்டி ஆகிய பகுதிகளில் கொடியேற்று விழாவிலும் பங்கேற்றார்.