/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஈஸ்வரன், பெருமாள் கோவில் தேர்களுக்கு 26ல் முகூர்த்தக்கால்
/
ஈஸ்வரன், பெருமாள் கோவில் தேர்களுக்கு 26ல் முகூர்த்தக்கால்
ஈஸ்வரன், பெருமாள் கோவில் தேர்களுக்கு 26ல் முகூர்த்தக்கால்
ஈஸ்வரன், பெருமாள் கோவில் தேர்களுக்கு 26ல் முகூர்த்தக்கால்
ADDED : ஏப் 22, 2024 12:47 AM

திருப்பூர்;திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி (ஈஸ்வரன்), ஸ்ரீவீரராகவப்பெருமாள்(பெருமாள்) கோவில் வைகாசி விசாகத் தேர்த்திருவிழாவுக்கான ஏற்பாடுகள் துவங்கின. வரும் 16ல் தேர்களுக்கு முகூர்த்தக்கால் நடப்படுகிறது.
தேர்த்திருவிழா, வரும் மே 16ம் தேதி கிராம சாந்தி; 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தினமும் காலை, மாலை, உற்சவ மூர்த்திகள் திருவீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர்.
மே 21ம் தேதி பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு,கருடசேவை காட்சி; 22ம் தேதி திருக்கல்யாணம், 23ம் தேதி சுவாமிகள் திருத்தேருக்கு எழுந்தருள உள்ளனர்; அன்று மாலை, ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி தேரோட்டமும், 24 ம் தேதி ஸ்ரீவீரராகவர் கோவில் தேரோட்டமும் நடக்க உள்ளது.
வரும் 25ம் தேதி பரிவேட்டை, 26ல் தெப்பத்திருவிழா, 27ம் தேதி தரிசனம், 28ம் தேதி மஞ்சள் நீர் உற்சவம், 29ம் தேதி விடையாற்றி உற்சவமும் நடைபெற உள்ளது.
தேர்த்திருவிழாவை முன்னிட்டு, நேற்று தேர்களின் கூடாரம் பிரிக்கும் நிகழ்ச்சி நடந்தது. கோவில் அலுவலர்கள் முன்னிலையில், தேர் கூடாரம் பிரிக்கப்பட்டது. வரும் 26ம் தேதி தேர்களுக்கு முகூர்த்தக்கால் நடப்படும்; மே 19ம் தேதி, இரண்டு தேர்களுக்கும் கலசம் பொருத்தும் நிகழ்ச்சியும் நடத்த, கோவில் அறங்காவலர் குழுவும், அலுவலர்களும் முடிவு செய்துள்ளனர்.

