/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பன்முக திறமையில் மிளிர்ந்த முருகு பள்ளி மாணவர்கள்!
/
பன்முக திறமையில் மிளிர்ந்த முருகு பள்ளி மாணவர்கள்!
பன்முக திறமையில் மிளிர்ந்த முருகு பள்ளி மாணவர்கள்!
பன்முக திறமையில் மிளிர்ந்த முருகு பள்ளி மாணவர்கள்!
ADDED : மார் 02, 2025 04:45 AM

திருப்பூர்: திருப்பூர், பி.என்., ரோட்டில் உள்ள முருகு மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளியில், தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி, வண்ண கண்காட்சி மற்றும் தனித்திறமை வெளிக்காட்டுதல் என, முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது.
கண்காட்சியை பள்ளி தாளாளர் பசுபதி, பள்ளி முதல்வர் சசிகலா ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். இதில், கே.ஜி., வகுப்பு படிக்கும் மழலைகள், மஞ்சள், சிவப்பு, ஊதா, பச்சை, வெண்மை மற்றும் கருமை உள்ளிட்ட பிரிவு களாக பிரிக்கப்பட்டு, வண்ணமயமான பொருட்கள், பழங்கள், ஓவியங்கள் மற்றும் பொம்மைகளை நேர்த்தியாக காட்சிப்படுத்தினர்.
'எங்களின் நட்சத்திரம்' என்ற தலைப்பில், 1 முதல், 5ம் வகுப்பு வரையுள்ள மாணவ, மாணவியர் தங்களின் தனித்திறமைகளை வெளிக்காட்டி, பெற்றோரையும், பார்வையாளர்களையும் வியப்பில் ஆழ்த்தினர். 6 முதல், 8 ம் வகுப்பு வரையிலான மாணவர்கள், தங்களின் அறிவியல் அறிவை வெளிக்காட்டும் வகையில், 200க்கும் மேற்பட்ட பல்வேறு அறிவியல் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தி, அதற்கான விளக்கத்தையும் அளித்தனர்.