/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விநாயகர் கோவிலுக்கு முஸ்லிம் இடம்; திருப்பூர் அருகே மத நல்லிணக்கம்
/
விநாயகர் கோவிலுக்கு முஸ்லிம் இடம்; திருப்பூர் அருகே மத நல்லிணக்கம்
விநாயகர் கோவிலுக்கு முஸ்லிம் இடம்; திருப்பூர் அருகே மத நல்லிணக்கம்
விநாயகர் கோவிலுக்கு முஸ்லிம் இடம்; திருப்பூர் அருகே மத நல்லிணக்கம்
ADDED : மே 28, 2024 12:28 AM

திருப்பூர் : விநாயகர் கோவில் கட்ட இடம் வழங்கிய இஸ்லாமிய மக்கள், சீர்வரிசையுடன் சென்று கும்பாபிஷேக விழாவில் பங்கேற்றது பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது.
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் ஒன்றியம், கணபதிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்டது ஒட்டபாளையம் ரோஸ் கார்டன். அப்பகுதியில், 300க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வருகின்றன.
அங்குள்ள முஸ்லிம் மக்கள் வழிபட மசூதி உள்ளது. ஹிந்து மக்கள் வழிபாடு நடத்த கோவில் இல்லாதது குறையாக இருந்தது.
நிலம் வாங்கி விநாயகர் கோவில் கட்டலாம் என, அப்பகுதி மக்கள் முயற்சித்து கொண்டிருந்தனர்.
இந்நிலையில், முஸ்லிம் மக்கள், கோவில் கட்ட 3 சென்ட் நிலத்தை தானமாக வழங்கியுள்ளனர். அந்த நிலத்தில், விநாயகர் கோவில் கட்டி, நேற்று முன்தினம் கும்பாபிஷேகம் நடந்தது.
கோவிலுக்கு நிலம் வழங்கிய இஸ்லாமிய மக்கள், பழங்கள், பூக்கள் என, ஏழு தட்டுகளில் சீர்வரிசை எடுத்து வந்து கோவிலில் சமர்ப்பித்தனர். கோவில் கமிட்டியினர் சார்பில், முஸ்லிம்களை மேள, தாளத்துடன் அழைத்து சென்று, மரியாதை செய்யப்பட்டது.
ஹிந்து - முஸ்லிம் மக்களின் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக, கோவில் கட்ட இடத்தை தானமாக வழங்கியதுடன், சீர்வரிசையுடன் விழாவில் பங்கேற்று சிறப்பித்த ரோஸ் கார்டன் மக்களை, பல தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.