/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'நாம் தமிழர்' கட்சிக்குஅவிநாசியில் அதிக ஓட்டு
/
'நாம் தமிழர்' கட்சிக்குஅவிநாசியில் அதிக ஓட்டு
ADDED : ஜூன் 07, 2024 12:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்;நாம் தமிழர் கட்சிக்கு, அவிநாசி சட்டசபை தொகுதியில் அதிக ஓட்டு கிடைத்துள்ளது.
நீலகிரி லோக்சபா தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக, ஊட்டியில் வசிக்கும் ஜெயக்குமார் என்பவர் போட்டியிட்டார். இவர், 58 ஆயிரத்து 821 ஓட்டுகளை பெற்றார்.
இதில், அதிகபட்சம், அவிநாசி சட்டசபை தொகுதியில் இருந்து, 13 ஆயிரத்து 925 ஓட்டு கிடைத்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக, மேட்டுப்பாளையம் சட்டசபை தொகுதியில், 12,364; பவானிசாகர் தொகுதியில், 8,642 ஓட்டுகள் கிடைத்தன.
ஊட்டி தொகுதியில், 6,895; கூடலுார் தொகுதியில், 8,948; குன்னுார் தொகுதியில், 7,814 ஓட்டுகள் கிடைத்துள்ளன.