நந்தா தொழில்நுட்ப கல்லுாரி 15வது பட்டமளிப்பு விழா
நந்தா தொழில்நுட்ப கல்லுாரி 15வது பட்டமளிப்பு விழா
ADDED : ஆக 02, 2026 06:42 PM
திருப்பூர், ஆக. 3–
நந்தா தொழில்நுட்பக் கல்லுாரி 15-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவர் சண்முகன் தலைமை வகித்தார். முதல்வர் நந்தகோபால் ஆண்டறிக்கை வாசித்தார்.
சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மஸ்கோர் வேர் நிறுவன முதன்மை மனிதவள அலுவலர் சசிகாந்த் ஜெயராமன், தரவரிசையில் இடம் பெற்ற 12 மாணவர்கள் உட்பட 235 இளங்கலை மற்றும் முதுகலை பொறியியல் மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கிப் பாராட்டினார்.
அறக்கட்டளை உறுப்பினர் பானுமதி சண்முகன், இணை நிர்வாக அறங்காவலர்கள் நந்தகுமார் பிரதீப், திருமூர்த்தி, வளாக நிர்வாக அலுவலர் வேலுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
–––
நந்தா தொழில்நுட்பக் கல்லுாரி பட்டமளிப்பு விழாவில், மல்டிகோர் வேர் நிறுவன முதன்மை மனித வள அலுவலர் சசிகாந்த் ஜெயராமன், மாணவ–மாணவியருக்கு பட்டங்களை வழங்கினார். அருகில், ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளை தலைவர் சண்முகன் மற்றும் நிர்வாகிகள்.
