/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேசிய மருத்துவர் தினம் டாக்டர்களுக்கு பாராட்டு
/
தேசிய மருத்துவர் தினம் டாக்டர்களுக்கு பாராட்டு
ADDED : ஜூலை 01, 2024 11:50 PM
திருப்பூர்:தேசிய மருத்துவர் தினத்தை முன்னிட்டு டாக்டர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
திருப்பூர் பாரத் ஏஜென்சீஸ் மக்கள் மருந்தகம் சார்பில், தேசிய மருத்துவர் தினம் கொண்டாடப்பட்டது. மருத்துகத்தின் உரிமையாளர் அருண் பாரத் தலைமை வகித்தார். பாரதிய பிரதான் மந்திரி ஒளஷதி பரியோஜனா திட்டத்தின் மூத்த மருத்துவ விற்பனை அலுவலர் அரவிந்தசாமி முன்னிலை வகித்து, திட்டம் குறித்து விளக்கினார்.
விழாவில், ஏ.எம்.சி., மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை சேர்மன் டாக்டர் பிரபு சங்கர், நிர்வாகி டாக்டர் ஜீவநந்தினி, டாக்டர்கள் ராகுல் (ஈ.என்.டி.,), கருப்புசாமி (பொது), மனோஜ்குமார் (குழந்தைகள் நலம்) ப்ரீத்தி (பொது, விமல் (பொது) ஆகியோருக்கு பொன்னாடை அணிவிக்கப்பட்ட மத்திய அரசின் நினைவு பரிசு வழங்கி பாராட்டினர். ஜோதி எலக்ட்ரானிக்ஸ் உரிமையாளர் சரண்ராஜ், உடற்கல்வி ஆசிரியர் ராமகிருஷ்ணன், ஏ.எம்.சி., மருத்துவமனை நிர்வாக அலுவலர் ரஞ்சித் மற்றும் மருத்துவமனை அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.