/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேசிய அறிவியல் தின போட்டி; வென்ற மாணவர்களுக்கு பாராட்டு
/
தேசிய அறிவியல் தின போட்டி; வென்ற மாணவர்களுக்கு பாராட்டு
தேசிய அறிவியல் தின போட்டி; வென்ற மாணவர்களுக்கு பாராட்டு
தேசிய அறிவியல் தின போட்டி; வென்ற மாணவர்களுக்கு பாராட்டு
ADDED : மார் 04, 2025 11:36 PM

உடுமலை; அறிவியல் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, வித்ய நேத்ரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டு தெரிவித்தனர்.
தேசிய அறிவியல் தினத்தையொட்டி, உடுமலை கலிலியோ அறிவியல் கழகம் மற்றும் சுற்றுச்சூழல் சங்கம் சார்பில், பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் போட்டிகள் நடந்தது. அறிவியல் கண்காட்சி, கட்டுரை, பேச்சு போட்டிகள் இடம் பெற்றது.
இதில், வித்ய நேத்ரா மெட்ரிக் பள்ளி மாணவர்களும் பங்கேற்று வினாடிவினா போட்டி, ஓவியம், கட்டுரைப்போட்டியில் வெற்றி பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்றவர்களுக்கும், போட்டிகளில் பங்கேற்றவர்களுக்கும் பள்ளி தாளாளர் நந்தகோபாலகிருஷ்ணன், பள்ளி முதல்வர் கோபாலகிருஷ்ணன், ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.