/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேசிய துப்பாக்கி சுடும் போட்டி; தங்கம் வென்ற உடுமலை மாணவி
/
தேசிய துப்பாக்கி சுடும் போட்டி; தங்கம் வென்ற உடுமலை மாணவி
தேசிய துப்பாக்கி சுடும் போட்டி; தங்கம் வென்ற உடுமலை மாணவி
தேசிய துப்பாக்கி சுடும் போட்டி; தங்கம் வென்ற உடுமலை மாணவி
ADDED : ஆக 14, 2024 09:18 PM

உடுமலை: தேசிய அளவில் துப்பாக்கி சுடும் போட்டியில், தங்கப்பதக்கம் பெற்ற மாணவிக்கு, உடுமலை ஜி.வி.ஜி., விசாலாட்சி பெண்கள் கல்லுாரியில் பாராட்டு விழா நடந்தது.
உடுமலை ஜி.வி.ஜி., விசாலாட்சி பெண்கள் கல்லுாரியில், மூன்றாமாண்டு ஆங்கில இலக்கியம் படிக்கும் மாணவி பிரீத்தி, பல்வேறு தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்றுள்ளார்.
மாணவிக்கு கல்லுாரி நிர்வாகத்தின் சார்பில் பாராட்டு விழா நடந்தது. விழாவில், கல்லுாரி செயலாளர் சுமதி முன்னிலை வகித்தார். கல்லுாரி தேசிய மாணவர் படை அதிகாரி கேப்டன் கற்பகவள்ளி வரவேற்றார்.
கல்லுாரி இயக்குனர் மஞ்சுளா, மாணவியரை ஊக்குவித்து பேசினார். கல்லுாரி முதல்வர் பரமேஸ்வரி தலைமை வகித்தார்.
விழாவில், 5 தமிழ்நாடு பெண்கள் பட்டாலியன் கமாண்டிங் அதிகாரி ஜோஷி, மாணவிக்கும், தேசிய மாணவர் படை அதிகாரிக்கும் பாராட்டு தெரிவித்தார்.
மாணவி பிரீத்தி கடந்தாண்டு துப்பாக்கி சுடும் பயிற்சியை துவக்கினார். போட்டிகளில் முன்பு வெண்கல பதக்கம் பெற்றார். தொடர்ந்து 5 தமிழ்நாடு பெண்கள் பட்டாலியன் சார்பில் மாணவிக்கு பயிற்சி வழங்கப்பட்டது.
இதையடுத்து, ஜூலை மாதம் திருவனந்தபுரத்தில் நடந்த, தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்று மாணவி தங்கப்பதக்கம் பெற்றார்.
அடுத்து மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்த, தேசிய அளவிலான போட்டியில், வெள்ளி வென்றுள்ளார். திருச்சி என்.ஐ.டி கல்லுாரியில் நடந்த தேசிய அளவிலான போட்டியில், தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார்.