/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இயற்கை சார்ந்த தயாரிப்பு; ஊக்கம் அளித்தால் சிறப்பு
/
இயற்கை சார்ந்த தயாரிப்பு; ஊக்கம் அளித்தால் சிறப்பு
இயற்கை சார்ந்த தயாரிப்பு; ஊக்கம் அளித்தால் சிறப்பு
இயற்கை சார்ந்த தயாரிப்பு; ஊக்கம் அளித்தால் சிறப்பு
ADDED : ஜூன் 10, 2024 02:22 AM

பல்லடம்;சுற்றுச்சூழலை பாதிக்கும் என்பதால், நெகிழி பைகள் உட்பட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்தது. ஆனால், பெயரளவுக்கு மட்டுமே இந்த தடை உத்தரவு பின்பற்றப்பட்டு வருகிறது. இவை தங்கு தடையின்றி வினியோகிக்கப்பட்டு வருகின்றன.
ஒருபுறம் என்னதான் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கடைகளில் வினியோகிக்கப்பட்டு வந்தாலும், மற்றொருபுறம், டம்ளர்கள், சமையல் கரண்டி, பேனா, சீப்பு என பல்வேறு வீட்டு உபயோகப் பொருட்களும், இயற்கை சார்ந்த மரங்களால் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
நாம் அன்றாடம் பயன்படுத்தும் சிறு சிறு பொருட்களும் இதுபோல் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வருகின்றன. ஆனால், பொதுமக்கள்தான் இவற்றுக்கு சரியான வரவேற்பு அளிப்பதில்லை. இயற்கையை பாதுகாக்கவும், சுற்றுச்சூழல் மாசடையாமல் இருக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தினால் மட்டும் போதாது; அதை செயல்படுத்தி காட்ட வேண்டும்.
இயற்கை சார்ந்த தயாரிப்புகளை நாம் பயன்படுத்தும்போது, சுற்றுச்சூழல் மாசடைவது தடுக்கப்படுவதுடன், குடிசைத் தொழிலாக இவற்றை செய்து வரும் பல லட்சம் தொழிலாளர்கள் பயன்பெறுகின்றனர்.
இதற்கு, பொதுமக்கள் இயற்கை சார்ந்த பொருட்களை பயன்படுத்தி அவற்றின் தயாரிப்புகளை ஊக்கப்படுத்த வேண்டியது அவசியம்.