/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தொழில் கடன் வேண்டுமா? சிறப்பு முகாமுக்கு வாங்க!
/
தொழில் கடன் வேண்டுமா? சிறப்பு முகாமுக்கு வாங்க!
ADDED : ஆக 21, 2024 11:41 PM
உடுமலை : திருப்பூர் - அவிநாசி ரோடு, குமார் நகரில் உள்ள தொழில்முதலீட்டு கழகத்தில், சிறப்பு கடன் முகாம், கடந்த 19ல் துவங்கி நடைபெற்று வருகிறது.
வரும் செப்., 6ம் தேதி வரை இம்முகாம் நடைபெறும். மத்திய, மாநில அரசின் மானியத்துடன், தொழில்முனைவோருக்கு கடன் வழங்கப்படுகிறது. முதல் தலைமுறை தொழில்முனைவோர், தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்ட மானியத்தில் கடன் வழங்கப்படுகிறது.
ஏற்கனவே இயங்கிவரும் நிறுவனங்கள், உற்பத்தியை மேம்படுத்துவதற்கான விரிவாக்க பணிகள், நவீன மயமாக்கலுக்கு, கூடுதலாக, 5 சதவீத மானியம் பெறலாம். முகாம் காலத்தில் விண்ணப்பிப்போருக்கு, பரிசீலனை கட்டணத்தில், 50 சதவீத சலுகை அளிக்கப்படுகிறது.
கூடுதல் விபரங்களுக்கு, 0421 4238567 என்கிற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. தொழில் முனைவோர் இந்த முகாமை பயன்படுத்திக்கொள்ளலாம்.