/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மதிப்பு கூட்டு பொருள் தயாரிக்க பயிற்சி வேண்டும்
/
மதிப்பு கூட்டு பொருள் தயாரிக்க பயிற்சி வேண்டும்
ADDED : பிப் 10, 2025 05:40 AM
உடுமலை : தக்காளியில் இருந்து மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிக்க, வேளாண் ஆர்வலர்கள் குழுக்களுக்கு பயிற்சியளித்து, தொழில் துவங்க, அரசு உதவ வேண்டும்.
உடுமலை பகுதியில், ஆண்டு முழுவதும், கிணற்றுப்பாசனத்திற்கு, சீசனில், 30 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக தக்காளி பயிரிடப்படுகிறது.
உடுமலை தினசரி சந்தை மற்றும் மொத்த வியாபாரிகள் வாயிலாக, தக்காளி, விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு, பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது.
சீசன் சமயங்களில், வரத்து பல மடங்கு உயர்ந்து விலை சரிகிறது. பாதிக்கப்படும் விவசாயிகள், போக்குவரத்திற்கு செலவிட்டு, தக்காளியை உடுமலைக்கு கொண்டு வராமல், ரோட்டோரத்தில் வீசி விடுகின்றனர்.
விவசாயிகள் கூறியதாவது: விலை வீழ்ச்சி காலங்களில், சிறியளவிலான தக்காளி பழங்களை வியாபாரிகள் கொள்முதல் செய்வதில்லை. எனவே, அவ்வகை பழங்களை ரோட்டில் வீச வேண்டிய நிலை ஏற்படுகிறது. பல ஆயிரம் ஏக்கரில், பயிரிடப்படும் சாகுபடியை பாதுகாக்க, அரசு, தக்காளியிலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் 'ஜாம்' தொழிற்சாலையை உடுமலை பகுதியில், துவக்க வேண்டும்.
அல்லது வேளாண் ஆர்வலர் குழுக்களுக்கு மதிப்பு கூட்டு பொருள் தயாரிப்புக்கான பயிற்சியளித்து, தொழில் துவங்க கடன் உதவி வழங்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.