/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விவசாயிகளுக்கு வழங்க வேப்பங்கன்றுகள் தயார்
/
விவசாயிகளுக்கு வழங்க வேப்பங்கன்றுகள் தயார்
ADDED : ஆக 01, 2024 12:46 AM
உடுமலை : 'மண்ணுயிர் காப்போம்' திட்டத்தில், விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் மற்றும் உயிர்ம வேளாண் இடுபொருட்கள் மானிய விலையில் வழங்கப்பட்டுவருகிறது.
பசுந்தாள் உர விதைகள், மண்புழு உரம் தயாரிக்கும் படுக்கை, வேப்பங்கன்றுகள், ஆடாதொடா, நொச்சி, ஒருங்கிணைந்த பண்ணையம், வேளாண் காடுகள் சார்ந்த மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது.
திருப்பூர் மாவட்டத்தில், 2024 - 25ம் ஆண்டுக்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இடுபொருள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
'மண்ணுயிர் காப்போம்' திட்டத்தில், திருப்பூர் மாவட்ட விவசாயிகளுக்கு வழங்குவதற்காக, 35 ஆயிரம் வேப்பங்கன்றுகள் தயாராக உள்ளன.
வேப்பங்கன்று தேவைப்படும் விவசாயிகள், சிட்டா, அடங்கல் மற்றும் ஆதார் அட்டையுடன், வட்டார வேளாண் உதவி இயக்குனர்களை அணுகி பெற்றுக்கொள்ளலாம் என, மாவட்ட வேளாண் இணை இயக்குனர் கிருஷ்ணவேணி தெரிவித்துள்ளார்.