/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நீர்மோர் பந்தல்: மக்கள் வரவேற்பு
/
நீர்மோர் பந்தல்: மக்கள் வரவேற்பு
ADDED : மே 09, 2024 04:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம், : கோடை வெயில் வாட்டி வதைப்பதால், பகல் நேரத்தில் பொதுமக்கள் வெளியே தலைகாட்டவே அச்சப்படுகின்றனர்.
வாகன ஓட்டிகள், பொதுமக்களை வெயில் வாட்டி வதைப்பதால், சிறிது நேரத்திலேயே களைப்படைகின்றனர். கோடை வெப்பத்திலிருந்து பாதுகாக்கவும், உடலில் ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறையை ஈடுகட்டவும் பொதுமக்கள் குடிநீரை தேடி செல்கின்றனர்.
பொதுமக்களின் தேவையை உணர்ந்து, அனைத்துக் கட்சியினர், அமைப்பினர் பல்வேறு இடங்களில் நீர்மோர் பந்தல் திறந்துள்ளது; பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.