/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நெட் படம் தெருநாய் கட்டுப்படுத்தும் திட்டம்! மாவட்டம் முழுக்க விரிவுபடுத்த ஆலோசனை
/
நெட் படம் தெருநாய் கட்டுப்படுத்தும் திட்டம்! மாவட்டம் முழுக்க விரிவுபடுத்த ஆலோசனை
நெட் படம் தெருநாய் கட்டுப்படுத்தும் திட்டம்! மாவட்டம் முழுக்க விரிவுபடுத்த ஆலோசனை
நெட் படம் தெருநாய் கட்டுப்படுத்தும் திட்டம்! மாவட்டம் முழுக்க விரிவுபடுத்த ஆலோசனை
ADDED : ஜூலை 28, 2024 12:33 AM
திருப்பூர்;தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யும் திட்டத்தை, மாவட்டம் முழுதும் விரிவுப்படுத்த ஆலோசிக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்ட பிராணிகள் துயர் துடைப்பு சங்கத்தின் பொதுக்குழு கூட்டம், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் தலைமையில் நடந்தது. கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் மற்றும் தெருநாய் அனுதாபிகள் என, 150 பேர் பங்கேற்றனர்.
பொதுமக்கள் கூறுகையில் 'தெருநாய் தொல்லை பல இடங்களில் அதிகரித்து விட்டது. நடைபயிற்சி மேற்கொள்வோரை விரட்டி, கடிக்கின்றன; வாகனங்களின் குறுக்கே ஓடி, வாகன ஓட்டிகளை அச்சுறுத்துகிறது. தெரு நாய்களுக்கு தன்னார்வலர்கள் பலர் உணவு வழங்குவதால், அவை அதே இடத்தில் இருந்து விடுகின்றன. தெரு நாய்கள் அதிகரிக்க இதுதான் காரணம்,'' என்றனர்.
தன்னார்வலர்கள் சிலர் கூறுகையில், ''பசியால் வாடும் தெரு நாய்களுக்கு உணவு வழங்கும் போது சிலர் தடுக்கின்றனர்; எங்களை தாக்கவும் செய்கின்றனர். இதுகுறித்து, போலீஸ் ஸ்டேஷனில் புகார் வழங்கினாலும், போலீசார் புகாரை ஏற்க முன்வருவதில்லை,' என்றனர்.
உள்ளாட்சிகளுக்கே பொறுப்பு
விவாதங்களை தொடர்ந்து, அதிகாரிகள் கூறியதாவது;கருத்தடை அறுவை சிகிச்சை வாயிலாக மட்டுமே, தெருநாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த முடியும். பசியோடு இருக்கும் தெரு நாய்களுக்கு கருணை அடிப்படையில் உணவு வழங்குவதில் தவறில்லை; இதனால், பொதுமக்களுக்கும், தன்னார்வலர்களுக்கும் இடையே ஏற்படும் பிரச்னையை போலீசார் கையாள வேண்டும். திருப்பூர் மாநகராட்சி பகுதியில் தெருநாய் கருத்தடை செய்யும் பணி, ஒரு அறக்கட்டளையினர் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை, 6,000 தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் உள்ள பிற நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளிலும் இத்திட்டத்தை விரிவுப்படுத்த திட்டம் வகுக்ககப்படும்; இப்பணி மேற்கொள்ள தேவையான நிதியை அந்தந்த உள்ளாட்சி நிர்வாகங்கள் ஒதுக்க வேண்டும். வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களுக்கு, கால்நடை மருத்துவமனையில் கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.