/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
புதிய பாரத எழுத்தறிவு திட்ட கணக்கெடுப்பு பணி
/
புதிய பாரத எழுத்தறிவு திட்ட கணக்கெடுப்பு பணி
ADDED : மே 03, 2024 11:31 PM
திருப்பூர்:புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ், குறைந்தபட்ச எழுத்தறிவை வழங்க, கல்வி கற்காத, 15 வயதுக்கு மேற்பட்டவர்களை கண்டறிய, கணக்கெடுப்பு பணி இன்று துவங்குகிறது.
கல்வி கற்காத, 15 வயதுக்கு மேற்பட்டவர் களுக்கு தன்னார்வலர்களை கொண்டு அடிப்படை எழுத்தறிவு பயிற்றுவிப்பதற்கு 'புதிய பாரத எழுத்தறிவு திட்டம் 2022' மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குனரகம் மூலம் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அடிப்படை எழுத்தறிவு கல்வி கிடைக்க முயற்சிக்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, நடப்பாண்டு கணக்கெடுப்பு பணி இன்று துவங்குகிறது. பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், தன்னார்வலர்கள், பள்ளி கல்லுாரிகளில் உள்ள என்.சி.சி., மாணவர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் உள்ளிட்டோர் வாயிலாக எழுத, படிக்க தெரியாத, 15 வயதுக்கு மேலானவர்கள் கண்டறியப்பட உள்ளனர்.
கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுவோர், 'கிராம ஊராட்சி அளவிலும், புறநகரிலும், கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பிற மாநிலத்தவர், புலம் பெயர் தொழிலாளர்கள் மற்றும் மலைவாழ் பகுதியில் வசிப்பவர்கள் விடுபடாமல் கணக்கெடுப்பு இருக்க வேண்டும்,' என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இப்பணி முடிந்த பின், மாவட்ட அளவில், வட்டார அளவில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்துக்கான தன்னார்வலர்கள் நியமிக்கப்படுவர். 20 பேருக்கு ஒரு மையம், 200 மணி நேரம் பயிற்சி, குறைந்தபட்ச எழுத்தறிவு கிடைக்க செய்தால், உள்ளிட்ட பணிகள் அடுத்தடுத்து மேற்கொள்ள மாவட்ட கல்வித்துறை ஆலோசித்து வருகிறது.