/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
புதிய மினி பஸ் 'ரூட்' கலெக்டர் ஆய்வு
/
புதிய மினி பஸ் 'ரூட்' கலெக்டர் ஆய்வு
ADDED : மார் 06, 2025 06:22 AM

திருப்பூர்; புதிய மினிபஸ் வழித்தடங்கள் குறித்து, கலெக்டர் நேற்று ஆய்வு நடத்தினார்.
திருப்பூர் மாவட்டத்தில் 85 புதிய மினி பஸ் வழித்தடங்கள் உருவாக்கப்பட்டு அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது. புதிய வழித்தடங்களில் மினிபஸ் இயக்க விருப்பமுள்ளோர், வரும் 15ம் தேதிக்குள், வட்டார போக்குவரத்து அலுலகங்களில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதிய மினிபஸ் வழித்தடத்துக்கான விண்ணப்ப படிவத்தை பாரிவாகன் இணையதளத்தில் பெறலாம். 1,500 ரூபாய் கட்டணம் மற்றும் சேவை கட்டணம், 100 ரூபாய் என, மொத்தம் 1,600 ரூபாய் செலுத்தி, பூர்த்தி செய்யயப்பட்ட விண்ணப்ப படிவத்துடன், முகவரி சான்று ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். புதிய விண்ணப்பதாரர்கள், 30 ஆயிரம் ரூபாய்க்கான சால்வென்ஸி சான்று இணைக்க வேண்டும்.
இந்நிலையில், புதிய வழித்தடங்களில் மினிபஸ் இயக்குவது தொடர்பாக, கலெக்டர் கிறிஸ்துராஜ், திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்டில் நேற்று ஆய்வு நடத்தினார்.
மத்திய பஸ்ஸ்டாண்டிலிருந்து ஊத்துக்குளி - ஆர்.எஸ்., புதுார் மற்றும் வீரபாண்டியிலிருந்து வலையபாளையத்துக்கு புதிய வழித்தடங்களில் மினிபஸ் இயக்குவது குறித்து ஆய்வு செய்தார். திருப்பூர் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் வெங்கிடுசாமி, ஆய்வாளர்கள் நிர்மலாதேவி, விஜயா மற்றும் பலர் உடனிருந்தனர்.