/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருப்பூருக்கு புதிய டி.ஆர்.ஓ.,
/
திருப்பூருக்கு புதிய டி.ஆர்.ஓ.,
ADDED : ஆக 04, 2024 11:22 PM
திருப்பூர் : திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலராக, சிப்காட் பொதுமேலாளர் கார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக அரசு, நிர்வாக வசதிக்காக, மாவட்ட வருவாய் அலுவலர் நிலையில் உள்ள அதிகாரிகளை இடமாற்றம் செய்துள்ளது. தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, நேற்று இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மாவட்ட வருவாய் அலுவலர்கள், அந்த நிலையில் உள்ள, 20 அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருப்பூர் மாவட்ட டி.ஆர்.ஓ., ஜெய்பீம், சென்னை அரசு விருந்தினர் இல்லத்தின் இணை மாநில மரபு அலுவலர் மற்றும் வரவேற்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவன (சிப்காட்) சென்னை பொது மேலாளர் கார்த்திகேயன், திருப்பூர் டி.ஆர்.ஓ.,வாக நியமிக்கப்பட்டுள்ளார்.