/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பிரத்தியங்கிரா தேவி கோவிலில் நிகும்பலா ேஹாமம்
/
பிரத்தியங்கிரா தேவி கோவிலில் நிகும்பலா ேஹாமம்
ADDED : ஜூன் 07, 2024 01:01 AM

பல்லடம்;பல்லடம் அருகே, பிரத்தியங்கிரா தேவி கோவிலில், அமாவாசையை முன்னிட்டு, பில்லி, சூனியம் பயம் போக்கும் நிகும்பலா ஹோமம் நடந்தது.
பல்லடம் அடுத்த, வெங்கிட்டாபுரம் ஸ்ரீஅதர்வண பத்ரகாளி பீடத்தில், 16 அடி உயரத்துடன் ஸ்ரீபிரத்தியங்கரா தேவி அருள்பாலிக்கிறார். நேற்று, அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடந்தது.
முன்னதாக, நேற்று முன்தினம் ஸ்ரீமங்கள மகா சண்டி ஹோமம் நடந்தது. நேற்று காலை, அமாவாசை சிறப்பு வழிபாடுகள் துவங்கியது. பித்ரு சாபம், கடன் பிரச்னை, எதிரிகள் தொல்லை, கண் திருஷ்டி, கொடிய வியாதிகள், பில்லி, சூனியம், செய்வினை கோளாறுகளை போக்கும் ஸ்ரீபிரத்தியங்கிரா தேவி நிகும்பலா ஹோமம் நடந்தது. அதர்வண பத்ரகாளி பீடாதிபதி சப்தகிரி சுவாமிகள் ஹோமத்தை நடத்தி வைத்தார்.
வரமிளகாய் சங்கல்பம் செய்து நடந்த இந்த ஹோமத்தில், நுாற்றுக் கணக்கான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர். விநாயகர், முருகன், சனிபகவான் ஆகிய பரிவாரத் தெய்வங்களைத் தொடர்ந்து, மூலவர் பிரத்தியங்கிரா தேவிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
தங்கக் கவச அலங்காரத்தில் ஸ்ரீபிரத்தியங்கிரா தேவி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.