/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கேரளாவில் 'நிபா' வைரஸ் பரவல் தமிழக எல்லையில் கண்காணிப்பு
/
கேரளாவில் 'நிபா' வைரஸ் பரவல் தமிழக எல்லையில் கண்காணிப்பு
கேரளாவில் 'நிபா' வைரஸ் பரவல் தமிழக எல்லையில் கண்காணிப்பு
கேரளாவில் 'நிபா' வைரஸ் பரவல் தமிழக எல்லையில் கண்காணிப்பு
ADDED : ஜூலை 26, 2024 12:17 AM
திருப்பூர்:கேரளாவில் 'நிபா' வைரஸ் தாக்கம் அதிகமாகியுள்ளதால், மாவட்ட மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை உஷார்ப்படுத்தப்பட்டுள்ளது.
பழ வவ்வால் மூலம் 'நிபா' வைரஸ் மனிதர்களுக்குப் பரவுகிறது. உமிழ்நீர், சிறுநீர், சளி போன்றவை மூலம் நேரடியாகவும் பரவுகிறது. காய்ச்சல், தலைவலி, மயக்கம், சோர்வு, மனக்குழப்பம், மூளைக்காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் போன்றவை 'நிபா' வைரஸின் அறிகுறிகள்.
வவ்வால்களால் ஏற்கனவே கடிபட்ட பழங்களை உண்ணக்கூடாது. பழங்கள் மற்றும் காய்கறிகளை நன்கு கழுவிய பின் உட்கொள்ள வேண்டும். பொது இடங்களில் தும்மும் போதும், இருமும் போதும் மூக்கை கைக்குட்டை அல்லது துணியால் மூடிக்கொள்ள வேண்டும் என, சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுரை வழங்குகின்றனர்.
கேரள மாநிலத்தின் கோழிக்கோடு மாவட்டத்தில் 'நிபா' வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ளது. தமிழக எல்லை, சுகாதாரத்துறை கண்காணிப்பில் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம், உடுமலை அடுத்த ஒன்பதாறு சோதனைச்சாவடி, கேரள மாநிலம், மூணாறு பகுதியை தமிழகத்துடன் இணைக்கிறது.
அங்கிருந்து வருவோர் காய்ச்சல் பரிசோதனைக்கு பின்பே அனுமதிக்கப்படுகின்றனர். மருத்துவ கண்காணிப்பை 24 மணி நேரமும் சுழற்சி முறையில் தீவிரப்படுத்த வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் 'நிபா' வைரஸ் அறிகுறிகளுடன் சிகிச்சைக்கு வரும் நபர்களின் விவரங்களை உடனே மாவட்ட சுகாதார அலுவலகத்துக்கு தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

