/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'நிப்ட் - டீ கல்லுாரியில் டிசைனிங் ஸ்டுடியோ'
/
'நிப்ட் - டீ கல்லுாரியில் டிசைனிங் ஸ்டுடியோ'
ADDED : ஜூலை 06, 2024 01:06 AM

திருப்பூர் 'நிப்ட்-டீ' கல்லுாரியில், முதலாம் ஆண்டு மாணவ, மாணவியர் வரவேற்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
கல்லுாரி முதல்வர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். நிர்வாக தலைவர் மோகன் தலைமை வகித்தார். முதன்மை ஆலோசகர் ராஜா சண்முகம் பேசுகையில், ''திருப்பூரின் எதிர்கால வளர்ச்சியில், புதிய மாணவ, மாணவியர் பங்களிப்பு இன்றியமையாததாக இருக்கும். கல்லுாரியில் அமைய உள்ள 'டிசைனிங் ஸ்டுடியோ',வில், வெளிநாட்டினரும் வந்து, ஆடை வடிவமைத்து சந்தைப்படுத்த வாய்ப்புள்ளது,'' என்றார். இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சி, ஆடை வடிமைப்புத்துறை 'பேஷன் ேஷா' நிகழ்ச்சிகள் அனைவரது பாராட்டுகளையும் பெற்றன. கல்லுாரி இணை தலைவர் பழனிசாமி, இணை தலைவர் ரங்கசாமி, பொதுக்குழு உறுப்பினர் ராமசாமி உள்ளிட்டோர் பேசினர்.