/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அக்னி நட்சத்திர வெயில் நிறைவு ;கோவிலில் இன்று நிவர்த்தி பூஜை
/
அக்னி நட்சத்திர வெயில் நிறைவு ;கோவிலில் இன்று நிவர்த்தி பூஜை
அக்னி நட்சத்திர வெயில் நிறைவு ;கோவிலில் இன்று நிவர்த்தி பூஜை
அக்னி நட்சத்திர வெயில் நிறைவு ;கோவிலில் இன்று நிவர்த்தி பூஜை
ADDED : மே 29, 2024 12:18 AM
திருப்பூர் :கடந்த 4ம் தேதி துவங்கிய அக்னிநட்சத்திர வெயில், நேற்றுடன் நிறைவு பெற்றது.
கோடை காலம் பயங்கர வெயிலாக இருந்தாலும், அக்னி நட்சத்திரம் எனப்படும், 24 நாட்கள் உச்சகட்ட வெயிலாக இருக்கும். இந்தாண்டு, அக்னி நட்சத்திரம் துவங்கும் முன்னதாகவே, வெயில் மண்டையை பிளந்து கொண்டிருந்தது. தமிழகம் முழுவதும் கடும் வெப்ப தாக்கம் இருந்தது.
பொதுமக்கள், மதிய நேரம் தேவையின்றி வெளியே நடமாட வேண்டாம் என, அரசு அறிவித்தது. உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக, ஓ.ஆர்.எஸ்., கரைசல் மற்றும் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது. தன்னார்வ அமைப்பினர், அ.தி.மு.க., - தி.மு.க., - பா.ஜ., என பல்வேறு கட்சியினர் நீர்மோர் பந்தல் அமைத்து, பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கி, தாகத்தை தணித்தனர்.
அக்னி நட்சத்திரம், கடந்த, 4ம் தேதி துவங்கிய பின், கோடை மழை பெய்ய துவங்கியது. கடும் வெப்பத்தால் பரிதவித்து வந்த மக்கள் நிம்மதி அடைந்தனர். அக்னி நட்சத்திரம் தெரியாத அளவுக்கு, வெயிலை குறைந்துவிட்டது.
அக்னி நட்சத்திரம் நேற்றுடன் நிறைவடைந்துள்ள நிலையில், கோவிலில் இன்று நிவர்த்தி பூஜைகள் நடக்கிறது.