/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
2 ஆண்டாக மின் இணைப்பு இல்லை; மின் வாரியத்தில் வணிகர்கள் புகார்
/
2 ஆண்டாக மின் இணைப்பு இல்லை; மின் வாரியத்தில் வணிகர்கள் புகார்
2 ஆண்டாக மின் இணைப்பு இல்லை; மின் வாரியத்தில் வணிகர்கள் புகார்
2 ஆண்டாக மின் இணைப்பு இல்லை; மின் வாரியத்தில் வணிகர்கள் புகார்
ADDED : மே 04, 2024 12:20 AM

பல்லடம்:வணிக கட்டடங்களுக்கு மின் இணைப்பு வழங்குவதற்கான விதிமுறைகளை தமிழக அரசு மாற்றி அமைத்தது.
இதன்படி, விதிமுறைகளைப் பின்பற்றி கட்ட டம் கட்டினால் மட்டுமே மின் இணைப்பு வழங்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விதிமுறை காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு வணிக கட்டடங்களுக்கு மின் இணைப்பு வழங்கப்படாமல் உள்ளது. இதுதொடர்பாக, நேற்று, பல்லடம் மின்வாரிய அலுவலகத்தில் வணிகர்கள் பலர் புகார் மனு அளித்தனர்.
அவர்கள் கூறியதாவது: கட்டடங்கள் கட்டி வாடகைக்கு விடலாம் என்றும், சொந்த பயன்பாட்டுக்காவது பயன்படுத்தலாம் என்ற யோசனையுடனும், பலர் செலவு செய்த நிலையில், மின் இணைப்பு கிடைக்காமல் இரண்டு ஆண்டாக பரிதவித்து வருகிறோம்.
தற்காலிக மின் இணைப்பு பெற்றால் இரு மடங்கு கட்டணத்தை செலுத்த வேண்டும் என்பதால், வாடகைக்கு வரவே பலரும் அச்சப்படுகின்றன. இதனால், கட்டடம் பயன்பாடின்றி கிடப்பதுடன், செலவு செய்த தொகைக்காக வங்கியில் வட்டி செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
நகராட்சி மூலம் கட்டட பணி நிறைவு சான்று வழங்கினால் மட்டுமே மின் இணைப்பு வழங்கப்படும் என மின்வாரியம் கூறுகிறது. ஆனால், ஏற்கனவே கட்டப்பட்ட கட்டடங்களுக்கு நகராட்சி பணி நிறைவு சான்று வழங்க மறுக்கிறது. பல்லடம் பஸ் ஸ்டாண்டில் நகராட்சி சார்பில் கட்டப்பட்டுள்ள வணிக வளாக கடைகள் விதிமுறைப்படி தான் கட்டப்பட்டுள்ளதா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.
விதிமுறைகள் அனைவருக்கும் பொதுவானது என்றால், விதிமுறை பின்பற்றாமல் கட்டப்பட்ட நகராட்சி கடைகளுக்கு மட்டும் மின் இணைப்பு வழங் கியது ஏன் என்ற கேள்வி எழுகிறது என்றனர்.
முன்னதாக, பல்லடம் நகராட்சி பகுதியை சேர்ந்த வணிகர்கள் பலர் தனித்தனியாக மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் மனு அளித்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.