/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விலையில் 'இனிப்பில்லை'; மிளகாய் விவசாயிகள் வேதனை
/
விலையில் 'இனிப்பில்லை'; மிளகாய் விவசாயிகள் வேதனை
ADDED : செப் 17, 2024 11:56 PM
பொங்கலுார் : பச்சை மிளகாய்க்கு போதிய விலை கிடைக்காததால், விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
வைகாசி பட்டத்தில் சாகுபடி செய்த மிளகாய் தற்பொழுது அறுவடை செய்யப்பட்டு வருகிறது. மாவட்டத்தின் பல பகுதிகளில் அறுவடை செய்யப்படும் மிளகாய் ஒட்டன்சத்திரம் சந்தைக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.
விளைச்சல் அதிகரிப்பால் விலை சரிந்துள்ளது. கடந்த மாதம் கிலோ, 30 ரூபாய்க்கு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டது. தற்பொழுது கமிஷன் மண்டிகளில் குண்டு மிளகாய் கிலோ, 22 ரூபாய்க்கும், சம்பா மிளகாய் கிலோ, 15 ரூபாய்க்கும் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது.
உழவர் சந்தையில் கிலோ, 40 ரூபாய்க்கு விலை போன போதிலும் பெரும்பாலான விவசாயிகள் உழவர் சந்தையில் விற்பனை செய்ய முடிவதில்லை. இதனால், வியாபாரிகள் கேட்ட விலைக்கு விற்பனை செய்வதைத் தவிர வேறு வழி இல்லை.
இது குறித்து மிளகாய் சாகுபடி விவசாயிகள் சிலர் கூறுகையில், 'ஒரு நாளைக்கு ஒரு தொழிலாளி ஐம்பது கிலோ மிளகாய் அறுவடை செய்ய முடிகிறது.
அறுவடை கூலி கிலோவுக்கு பத்து ரூபாய். நாற்று நடவு, களை எடுப்பு, உரம், மருந்து, உழவு கூலி என கிலோவுக்கு, 25 ரூபாய் வரை செலவாகிறது. அசலை விட குறைவாக விற்பனையாவதால் இந்த சீசனில் நஷ்டம் ஏற்படுகிறது,' என்றனர்.