/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஒரு மாதமாக குடிநீர் வரவில்லை நகராட்சி அலுவலகம் முற்றுகை
/
ஒரு மாதமாக குடிநீர் வரவில்லை நகராட்சி அலுவலகம் முற்றுகை
ஒரு மாதமாக குடிநீர் வரவில்லை நகராட்சி அலுவலகம் முற்றுகை
ஒரு மாதமாக குடிநீர் வரவில்லை நகராட்சி அலுவலகம் முற்றுகை
ADDED : பிப் 26, 2025 11:50 PM

பல்லடம்: பல்லடம், மங்கலம் ரோடு, எஸ்.ஆர்.கே., நகரில் வசிக்கும் பெண்கள், நேற்று குடங்களுடன் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அவர்கள் கூறியதாவது:
ஒரு மாதமாக குடிநீர் வரவில்லை. ரோட்டையும் தோண்டிப் போட்டுள்ளனர். ஓட்டு கேட்டு வந்தவர்கள் இப்போது வீதிப்பக்கமே வருவதில்லை. லாரி மூலம் வினியோகிக்கப்படும் குடிநீர், கழிவுநீர் போல் உள்ளது. லாரி மூலம் குடிநீர் வேண்டாம். மூன்று மாதமாக போராடியே குடிநீரை பெற்று வருகிறோம். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமலும், நாங்கள் வேலைக்கு செல்லாமலும், குடிநீருக்காக இங்கு வந்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
முன்னதாக, நகராட்சி கமிஷனர் அறை முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர். அதிகாரிகள் யாருமே வராத நிலையில், பெண் ஒருவர் மயக்கமடைந்தார். உடன் இருந்தவர்கள் குடிநீர் கொடுத்து அவரை ஆசுவாசப்படுத்தினர். நீண்ட நேரத்துக்குப் பின், நகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 'உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என, உறுதி கூறியதை தொடர்ந்து கலைந்து சென்றனர்.