/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வட மாநில வாலிபர் கல்லால் தாக்கி கொலை
/
வட மாநில வாலிபர் கல்லால் தாக்கி கொலை
ADDED : மார் 04, 2025 06:44 AM
திருப்பூர்; உ.பி., வாலிபரை கல்லால் தாக்கி கொலை செய்த அவரின் நண்பரை போலீசார் கைது செய்தனர்.
உ.பி., மாநிலத்தை சேர்ந்தவர் சுரேந்தர் சிங், 22. இவரது நண்பர் விவேக் தியாகி, 29. இருவரும் நண்பர்கள். இருவரும், திருப்பூரை அடுத்த கணியாம்பூண்டியில் தங்கி பனியன் வேஸ்ட் குடோனில் வேலை செய்து வந்தனர். நேற்று காலை இருவரும் மது அருந்தினர்.
போதையில், சுரேந்தர் சிங்கின் மொபைல் போனை விவேக் திருடினார். போன் மாயமானது குறித்து கேள்வி எழுப்பிய போது தகராறு ஏற்பட்டது. தொடர்ந்து, மாலை மீண்டும் மது அருந்தி விட்டு வந்த விவேக் தியாகி, சுரேந்தர் சிங் தலையில் கல்லை போட்டு கொலை செய்து தப்பி சென்றார்.
தகவலறிந்து சென்ற திருமுருகன்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையிலான போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர். துரிதமாக விசாரணை நடத்திய போலீசார், 45 நிமிடத்தில் மங்கலத்தில் பதுங்கியிருந்த விவேக் தியாகியை கைது செய்தனர்.