/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஒரு சொட்டு மழை இல்லை... கண்ணீர் வடிக்கும் விவசாயிகள்
/
ஒரு சொட்டு மழை இல்லை... கண்ணீர் வடிக்கும் விவசாயிகள்
ஒரு சொட்டு மழை இல்லை... கண்ணீர் வடிக்கும் விவசாயிகள்
ஒரு சொட்டு மழை இல்லை... கண்ணீர் வடிக்கும் விவசாயிகள்
ADDED : ஏப் 22, 2024 12:50 AM
பொங்கலுார்:மாசி முதல் வைகாசி மாதம் வரை கோடை மழை பெய்வது வழக்கம். மாசியில் மரம் தளைய மழை பெய்யும். அதுவும் இந்த ஆண்டு பொய்த்துப் போனது.
பங்குனி மாதத்திலாவது மழை பெய்யும் என்று விவசாயிகள் எதிர்பார்த்தனர். சித்திரை மாதம் பிறந்தும் மழை பெய்யாமல் ஏமாற்றம் தந்துள்ளது. ஏப்ரல் மாதம் முடிய இன்னும் ஒரு வாரமே பாக்கி இருக்கிறது. இதுவரை ஒரு சொட்டு கூட மழை பெய்யவில்லை.
இந்த ஆண்டு மழை இன்மையால் விவசாயிகளால் கோடை உழவு செய்ய முடியவில்லை. கோடை உழவு செய்யாவிட்டால் அடுத்து வைகாசி பட்ட சாகுபடியில் தாக்கத்தை ஏற்படுத்தும். பூச்சி தாக்குதல் அதிகரிப்பு, களைகள் அதிகரிப்பு போன்ற பல்வேறு பிரச்னைகளை விவசாயிகள் எதிர்கொள்ள நேரிடும்.
கோடை மழை பெய்யாததால் நிலத்தடிநீர்மட்டம் மிகவும் சரிந்துள்ளது. பல்லாண்டு பயிர்களான தென்னை, மா போன்ற பயிர்களை காப்பாற்றுவதே சிரமமாக இருக்கும்.
தண்ணீர் பற்றாக்குறையால் வைகாசி பட்ட சாகுபடி பணிகளை மேற்கொள்வது கடினமானதாக இருக்கும். இது விவசாயிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

