/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாரியம்மன் கோவிலில் உண்டியல் எண்ணிக்கை
/
மாரியம்மன் கோவிலில் உண்டியல் எண்ணிக்கை
ADDED : ஏப் 30, 2024 11:11 PM

உடுமலை;உடுமலை மாரியம்மன் கோவில் உண்டியல்கள் நேற்று எண்ணப்பட்டது. 15 லட்சம் ரூபாய் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.
உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா நிறைவடைந்த நிலையில், கோவில் உண்டியல்கள் நேற்று திறந்து எண்ணப்பட்டன.
கோவிலில், 4 நிரந்தர உண்டியல்களும், தேர்த்திருவிழாவிற்காக, 10 தற்காலிக உண்டியல்களும் வைக்கப்பட்டிருந்தன.
பரம்பரை அறங்காவலர் ஸ்ரீதர், செயல் அலுவலர் தீபா, ஆய்வர் சரவணன், எழுத்தர் குமரேசன் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில், உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. பக்தர்கள் மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.
இதில், நிரந்தர உண்டியல்களில், 11 லட்சத்து, ஒரு ஆயிரத்து, 225 ரூபாய் மற்றும் 55.77 கிராம் தங்கம், 120.38 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். தற்காலிக உண்டியல்களில், 4 லட்சத்து, 16 ஆயிரத்து, 518 ரூபாய் இருந்தது.