/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
செவிலியர்கள் பெருந்திரள் முறையீடு
/
செவிலியர்கள் பெருந்திரள் முறையீடு
ADDED : ஜூன் 22, 2024 12:51 AM

திருப்பூர்:அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கம் சார்பில், திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் நேற்று பெருந்திரள் முறையீடு போராட்டம் நடந்தது.
மாநில துணை தலைவர் முத்துலட்சுமி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் லட்சுமி, பொருளாளர் சவுடீஸ்வரி, செயலாளர் நாச்சாத்தாள் மற்றும் அனைத்து கிராம சுகாதார செவிலியர்கள் பங்கேற்றனர்.
முத்துலட்சுமி ரெட்டி நிதியுதவி திட்ட பணியை, வருவாய்த்துறையிடம் ஒப்படைக்கவேண்டும். கிராம சுகாதார செவிலியர்கள் மேற்கொள்ளும், தாய்சேய் நலம், தடுப்பூசி மற்றும் குடும்ப நலப்பணிகள் சிறப்பாக நடைபெற உத்தரவிடவேண்டும்.
கிராம சுகாதார செவிலியர்களை, கம்ப்யூட்டர் ஆபரேட்டர் உள்ளிட்ட முரண்பாடான பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது; ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ஒரு டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் நியமிக்கவேண்டும்.
ஆண் சுகாதார செவிலியர்கள்போல், பெண் சுகாதார செவிலியர்களுக்கும் பதவி உயர்வு வழங்கி, பாலின பாகுபாட்டை களையவேண்டும் என, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.