/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மகளிர் தின கொண்டாட்டம்; நடனமாடிய அலுவலர்கள்
/
மகளிர் தின கொண்டாட்டம்; நடனமாடிய அலுவலர்கள்
ADDED : மார் 07, 2025 03:45 AM

திருப்பூர்; மகளிர் தினத்தை முன்னிட்டு, திருப்பூர் மாவட்ட சமூக நலத்துறை சார்பில், பெண்களுக்கான போட்டிகள் நேற்றுமுன்தினம் துவங்கி நடைபெற்று வருகிறது.
முதல்நாளில் கவிதை போட்டி, கயிறு இழுத்தல், நாணயம் திருப்புதல் போட்டிகள் நடத்தப்பட்டன. நேற்று கலெக்டர் அலுவலக குறைகேட்பு கூட்ட அரங்கில் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அரசு அலுவலர்கள் உள்பட ஏராளமான பெண்கள் ஆர்வமுடன் பங்கேற்று, பாடலுக்கு ஏற்ப நடனமாடி அசத்தினர்.
தொடர்ந்து, வினாடி - வினா, பந்து எறிதல் போட்டிகள் நடத்தப்பட்டன. இன்று, லக்கி கார்னர், பாட்டுக்கு பாட்டு, லெமன் ஸ்பூன், கோலப்போட்டிகள் நடைபெறுகின்றன. மதியம், 3:00 மணிக்கு நடைபெறும் உலக மகளிர் தின விழாவில், விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற பெண்களுக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் பரிசு வழங்குகிறார்.