/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
முதல்வரின் உத்தரவை மதிக்காத அதிகாரிகள்; பொது வழியை மறித்து கார் ஷெட்
/
முதல்வரின் உத்தரவை மதிக்காத அதிகாரிகள்; பொது வழியை மறித்து கார் ஷெட்
முதல்வரின் உத்தரவை மதிக்காத அதிகாரிகள்; பொது வழியை மறித்து கார் ஷெட்
முதல்வரின் உத்தரவை மதிக்காத அதிகாரிகள்; பொது வழியை மறித்து கார் ஷெட்
ADDED : செப் 05, 2024 12:38 AM

திருப்பூர் : குடியிருப்பு பகுதியில் பொதுவழியை மறித்து கார் ஷெட் அமைக்கப்பட்டுள்ளது. முதல்வர் தனிப்பிரிவு உத்தரவுக்குப் பின்னரும், மாநகராட்சி நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
திருப்பூர் மாநகராட்சி, 56வது வார்டு பண்ணாரியம்மன் நகரில் வசிப்போர், 20 அடி அகலமுள்ள பொது வழிப்பாதையை பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், அப் பகுதியில் இரு வீடுகளின் உரிமையாளர்கள் தங்கள் வீடுகளுக்கு இடையே அமைந்துள்ள பொது வழித்தடத்தை ஆக்கிரமித்து, ஷெட் அமைத்து கார்களை நிறுத்தியுள்ளனர்.
இது குறித்து பலர் அறிவுறுத்தியும் கூட ஆக்கிரமிப்பை அகற்றவில்லை. இதனால், முதல்வர் தனிப்பிரிவுக்கு உரிய ஆதாரங்களுடன் புகார் அனுப்பி வைக்கப்பட்டது.
அம்மனு மீது உரிய நடவடிக்கை எடுத்து பதில் அளிக்க மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவு பிறப்பித்து ஒரு மாதத்துக்கு மேலாகியும் எந்த நடவடிக்கையும் இல்லை.
பொது வழியை ஆக்கிரமித்துள்ளோர் மீது முதல்வர் தனிப்பிரிவில் புகார் அளித்து, நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டும் எந்த நடவடிக்கையும் இல்லை என்பது அதிர்ச்சியளிப்பதாக அப்பகுதியினர் கூறுகின்றனர்.
இது குறித்து, மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ''பொது வழியை ஆக்கிரமிப்பு செய்துள்ள வருக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. அகற்றாவிட்டால், நிர்வாகம் சார்பில் அகற்றப்படும்,' என்றார்.