/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அச்சுறுத்தும் மின்கம்பம் குடியிருப்பில் அவலம்
/
அச்சுறுத்தும் மின்கம்பம் குடியிருப்பில் அவலம்
ADDED : மே 23, 2024 11:14 PM

உடுமலை;கடத்துார்புதுார் ஏ.டி., காலனியில், பராமரிப்பில்லாமல், தள்ளாடும் மின்கம்பத்தால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
மடத்துக்குளம் ஒன்றியம் கடத்துார்புதுார் ஏ.டி., காலனியில், 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கவும், தெருவிளக்கு அமைக்கவும், பல ஆண்டுகளுக்கு முன் மின்கம்பம் அமைக்கப்பட்டது.
இந்த மின்கம்பத்தின் அடித்தளத்தில், அமைக்கப்பட்ட கான்கிரீட் உதிர்ந்து, கம்பிகள் தற்போது வெளியே தெரிகிறது. மின்கம்பம் எந்நேரத்திலும் கீழே விழும் நிலையில் இருப்பதால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
அருகிலேயே வீடுகளும் இருப்பதால், மின் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. இது குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காததால், தமிழக முதல்வருக்கு அப்பகுதி மக்கள் புகார் மனு அனுப்பியுள்ளனர்.