/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சின்ன வெங்காயம் விவசாயிகள் விரக்தி
/
சின்ன வெங்காயம் விவசாயிகள் விரக்தி
ADDED : மே 11, 2024 12:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொங்கலுார்;கார்த்திகை பட்டத்தில் சாகுபடி செய்த சின்ன வெங்காயம் அறுவடையின் போது போதிய விலை கிடைக்கவில்லை. வேறு வழி இன்றி விவசாயிகள் பட்டறை அமைத்து இருப்பு வைத்தனர். சமீபத்தில் வெங்காய ஏற்றுமதிக்கான தடையை மத்திய அரசு விலக்கி உள்ளது.
இதனால், இருப்பு வைத்த சின்ன வெங்காயத்திற்கு நல்ல விலை கிடைக்கும் என்று விவசாயிகள் எதிர்பார்த்தனர். ஆனால் பெரிய அளவில் விலை உயரவில்லை.
கிலோ, 40 ரூபாய்க்கும் குறைவாகவே கொள்முதல் செய்யப்படுகிறது. இது விவசாயிகள் மத்தியில் விரக்தியை ஏற்படுத்தி உள்ளது.