/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சின்ன வெங்காயம் அறுவடை தீவிரம் விலையை எதிர்பார்த்து இருப்பு
/
சின்ன வெங்காயம் அறுவடை தீவிரம் விலையை எதிர்பார்த்து இருப்பு
சின்ன வெங்காயம் அறுவடை தீவிரம் விலையை எதிர்பார்த்து இருப்பு
சின்ன வெங்காயம் அறுவடை தீவிரம் விலையை எதிர்பார்த்து இருப்பு
ADDED : செப் 06, 2024 02:50 AM

உடுமலை:உடுமலை பகுதிகளில், சின்ன வெங்காயம் அறுவடை தீவிரமடைந்துள்ளது. விலை உயர்வை எதிர்பார்த்து ஒரு சில பகுதிகளில் இருப்பு வைக்கத்துவங்கியுள்ளனர்.
உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில், சின்ன வெங்காயம் அதிகளவு சாகுபடி செய்யப்பட்டு வந்தது. நடப்பாண்டு பருவ மழை துவங்கியது, நீர் வசதி உள்ள நிலங்களில், சின்னவெங்காயம் சாகுபடி செய்யப்பட்டது. நேரடியாக காய் விதை மற்றும் நாற்று நடவு முறையில், சாகுபடி செய்யப்பட்டிருந்தது. தற்போது, உடுமலை பகுதிகளில் சின்ன வெங்காயம் அறுவடை துவங்கியுள்ளது.
தற்போது அறுவடை செய்யப்படும் புதிய வெங்காயம், கிலோ, 25 முதல், 45 ரூபாய் வரை, வியாபாரிகள் நேரடியாக வந்து கொள்முதல் செய்து வருகின்றனர். கூடுதல் விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில், ஒரு சில விவசாயிகள் பட்டறை அமைத்து, இருப்பு வைத்து வருகின்றனர்.
விவசாயிகள் கூறுகையில், 'சின்ன வெங்காயம் சாகுபடிக்கு, உழவு, விதை, உரம், மருந்து, அறுவடை என, ஏக்கருக்கு, ஒரு லட்சம் ரூபாய் வரை செலவாகிறது. தற்போது, ஒரு கிலோ, வெங்காயம், 25 முதல், 45 ரூபாய் வரை விற்று வருகிறது. மேலும், விலை உயர வாய்ப்புள்ளதால், ஒரு சில பகுதிகளில், விலையை எதிர்பார்த்து, பட்டறை அமைத்து இருப்பு வைக்கத்துவங்கியுள்ளனர்,' என்றனர்.