/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குமரன் கல்லுாரியில் இணைய வழி கருத்தரங்கு
/
குமரன் கல்லுாரியில் இணைய வழி கருத்தரங்கு
ADDED : மார் 28, 2024 03:36 AM
திருப்பூர் : திருப்பூர் குமரன் கல்லுாரியில், கணினி அறிவியல் மற்றும் ஆராய்ச்சித்துறை சார்பில், சர்வதேச கருத்தரங்கம் இணைய வழியில் நடந்தது.இந்நிகழ்ச்சியில், துறைத் தலைவர் ேஹமலதா, வரவேற்றார். கல்லுாரி முதல்வர் வசந்தி, தலைமை வகித்தார்.
சிறப்பு விருந்தினர்களாக, அமெரிக்கா, மேரி லேண்டில் வசிக்கும் டாக்டர் கவுதமன் கோவிந்தராஜன், டெக்சாஸ் மாகாணத்தில், அகாடமிக் இன்ஸ்டிடியூட் ஹவுஸ்டன் மெத்தோடைஸ்ட் பேராசிரியர் முத்துராஜூ, 'மருத்துவ துறையில், கம்ப்யூட்டர் அறிவியலின் பயன்பாடு மற்றும் ஆராய்ச்சி குறித்து சிறப்புரையாற்றினார். டாக்டர் சந்திரமோகன் உள்ளிட்ட பலர் பேசினர்.
ஆராய்ச்சி படிப்புக்கான நுழைவு தேர்வு குறித்தும், அமெரிக்காவில் நடைபெறும் மருத்துவ ஆராய்ச்சிகளில், தமிழக மாணவர்களின் பங்களிப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதற்கான ஏற்பாடுகளை, டாக்டர் தேவிப்பிரியா மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர். கருத்தரங்கில், கம்ப்யூட்டர் அறிவியல் துறை பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.