/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
காளிபாளையத்தில் தாவரவியல் பூங்கா திறப்பு
/
காளிபாளையத்தில் தாவரவியல் பூங்கா திறப்பு
ADDED : ஜூலை 06, 2024 01:05 AM

திருப்பூர்;சாமளாபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட, காளிபாளையம் பகுதியில், 10.5 ஏக்கர் பரப்பில், போகர் தாவரவியல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மேற்கு ரோட்டரி, 'வனத்துக்குள் திருப்பூர் திட்டம், திருப்பூர் மாவட்ட கல்குவாரி மற்றும் கிரஷர் உரிமையாளர்கள் சங்கம் சார்பில், பூங்கா திறப்பு விழா மற்றும் மரக்கன்று நடும் விழா நேற்று நடந்தது. 'மியாவாகி' முறையில், 850 மரக்கன்றுகளும், அரிய வகையை சேர்ந்த, 250 மரக்கன்றுகளும் நடப்பட்டன.
திறப்பு விழாவுக்கு மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணியம் தலைமை வகித்து பேசுகையில், ''திருப்பூர் மாவட்டத்தில், கோவில் நிலத்தை மீட்டெடுக்கும் பணியை தடையின்றி செய்து வருகிறோம்.
தரிசாக கிடைக்கும் கோவில் நிலத்தில், பயனுள்ள மரங்களை நட்டு வளர்க்கவும் அறிவுறுத்தி வருகிறோம்,'' என்றார்.சாமளாபுரம் பேரூராட்சி தலைவர் பழனிசாமி முன்னிலை வகித்தார். 'போகர்' தாவரவியல் பூங்கா தலைவர் வெள்ளியங்கிரி, மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வன், ரோட்டரி மாவட்ட கவர்னர் தனசேகர், தமிழ்நாடு கல்குவாரி கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சின்னசாமி, மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியம்,எஸ்.கே.எல்., நிறுவன குழுமங்கள் தலைவர் மணி மற்றும் 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டக் குழுவினர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.
மேற்கு ரோட்டரி மெடிக்கல் டிரஸ்ட் தலைவர் சண்முகசுந்தரம், மேற்கு ரோட்டரி டிரஸ்ட் தலைவர் ஈஸ்வரன், செயலாளர் நட்ராஜன், பொருளாளர் ஈஸ்வரன் திட்டங்கள் குறித்து பேசினர்.
திருப்பூர் மேற்கு ரோட்டரி திட்ட சேர்மன் ரகுபதி, திட்டத்தைவிளக்கி பேசினார். தலைவர் பாலசுப்பிரமணியம், செயலாளர் கார்த்திக்குமார், பொருளாளர் சிவக்குமார், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.