/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
புதுப்பொலிவுடன் ஐ.எம்.ஏ., ஆடிட்டோரியம் திறப்பு
/
புதுப்பொலிவுடன் ஐ.எம்.ஏ., ஆடிட்டோரியம் திறப்பு
ADDED : ஜூலை 14, 2024 11:24 PM

திருப்பூர்:இந்திய மருத்துவர்கள் சங்க (ஐ.எம்.ஏ.,) திருப்பூர் கிளை சார்பில், டாக்டர் முருகநாதன் ஆடிட்டோரியம் திறப்பு விழா நேற்று நடந்தது.
ஐ.எம்.ஏ., திருப்பூர் கிளையில், 900 டாக்டர்கள் உறுப்பினராக உள்ளனர். கணியாம்பூண்டியில், ஐ.எம்.ஏ., திருப்பூர் கிளை சங்க கட்டடம் உள்ளது. கட்டடத்தை பொலிவுபடுத்தி, கூடுதல் வசதிகளுடன் கூடிய ஆடிட்டோரியமாக மாற்றப்பட்டுள்ளது.
ஆடிட்டோரியம், சமையல் கூடம், டைனிங்ஹால், பார்க்கிங் வசதியுடன் கூடிய மண்டபமாக மாற்றப்பட்டுள்ளது. திறப்பு விழா நேற்று நடந்தது.
கணியாம்பூண்டியில் நடந்த டாக்டர்கள் தின விழா மற்றும் பொலிவூட்டப்பட்ட டாக்டர் முருகநாதன் ஆடிட்டோரியம் திறப்பு விழாவுக்கு, தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் உறுப்பினர் முருகநாதன் தலைமை வகித்தார். ஐ.எம்.ஏ., தேசிய தலைவர் டாக்டர் அசோகன், ஆடிட்டோரியத்தை திறந்து வைத்தார். மாநில தலைவர் டாக்டர் அபுல் ஹசன், இரண்டாவது அரங்கை திறந்து வைத்தார்.
கலெக்டர் கிறிஸ்துராஜ், மாநில செயலாளர் டாக்டர் கார்த்திக் பிரபு, திருப்பூர் கிளை தலைவர் டாக்டர் பாண்டியராஜன், முன்னாள் தலைவர் டாக்டர் சரோஜா, செயலாளர் டாக்டர் ஆனந்த், நிதி செயலர் டாக்டர் பாத்திமாபேகம், இணை செயலாளர் சதீஷ்குமார் உள்ளிட்டோர் பேசினர்.
முன்னாள், இன்னாள் நிர்வாகிகள் கவுரவிக்கப்பட்டனர். முன்னதாக, குழந்தைகளின் கல்வி நிகழ்ச்சிகள் நடந்தன; போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு, நிர்வாகிகள் பரிசு வழங்கி பாராட்டினர்.
----
இந்திய மருத்துவர் சங்க, திருப்பூர் கிளையில், மருத்துவர் தின விழா மற்றும் டாக்டர் முருகநாதன் ஆடிட்டோரியம் திறப்பு விழா நேற்று நடந்தது. ஆடிட்டோரியத்தை தேசிய தலைவர் டாக்டர் அசோகன் திறந்து வைத்தார். அருகில் மாநில தலைவர் டாக்டர் அப்துல் ஹசன், மாநில மருத்துவ கவுன்சில் உறுப்பினர் டாக்டர் முருகநாதன், திருப்பூர் கிளை தலைவர் டாக்டர் பாண்டியராஜன் உள்ளிட்டோர்.