/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மக்கள் தாகம் தணிக்க நீர்மோர் பந்தல் திறப்பு
/
மக்கள் தாகம் தணிக்க நீர்மோர் பந்தல் திறப்பு
ADDED : மே 04, 2024 11:18 PM

திருப்பூர்;கோடை வெயில் கடந்த சில வாரங்களாக மக்களை வாட்டி வதைத்து வருகிறது. தற்போது அக்னி நட்சத்திரம் துவங்கிய நிலையில், வெயிலின் தாக்கத்தை சமாளிக்கும் வகையில், திருப்பூர் ஹிந்து வியாபாரிகள் நல சங்கத்தின் சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு வளர்மதி பஸ் ஸ்டாப் அருகே நேற்று திறக்கப்பட்டது. ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் பங்கேற்று திறந்து வைத்தார். மாநில பொது செயலாளர் கிஷோர் குமார், மாநில செயலாளர் சேவுகன், மாநில நிர்வாக குழு-திருப்பூர், காமராஜர் ரோடு, வ உறுப்பினர் கிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.வளர்மதி பஸ் ஸ்டாப் அருகே ஹிந்து வியாபாரிகள் நலச் சங்கத்தின் சார்பில், நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது.
வடக்கு மாவட்ட தி.மு.க.,
திருப்பூர்:திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில், வேலம்பாளையம், போயம்பாளையம் பிரிவு, மாநகராட்சி அலுவலக சந்திப்பு, மத்திய பஸ் ஸ்டாண்ட் மற்றும் செட்டிபாளையம் ஆகிய ஐந்து இடங்களில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.நேற்று இந்த ஐந்து நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது. தெற்கு எம்.எல்.ஏ., செல்வராஜ் இவற்றைத் திறந்து வைத்தார். நகர செயலாளர்கள் தினேஷ்குமார், நாகராஜ், வார்டு மற்றும் பகுதி ெசயலாளர்கள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். குடிநீர், நீர் மோர், எலுமிச்சை ஜூல், தர்ப்பூசணி பழத் துண்டு ஆகியன வழங்கப்பட்டது.
தி.மு.க., சார்பில், நீர்மோர் பந்தல் திறப்பு.
திருப்பூர்:திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில், வேலம்பாளையம், போயம்பாளையம் பிரிவு, மாநகராட்சி அலுவலக சந்திப்பு, மத்திய பஸ் ஸ்டாண்ட் மற்றும் செட்டிபாளையம் ஆகிய ஐந்து இடங்களில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று இந்த ஐந்து நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடந்தது. தெற்கு எம்.எல்.ஏ., செல்வராஜ் இவற்றைத் திறந்து வைத்தார். நகர செயலாளர்கள் தினேஷ்குமார், நாகராஜ், வார்டு மற்றும் பகுதி ெசயலாளர்கள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். குடிநீர், நீர் மோர், எலுமிச்சை ஜூல், தர்ப்பூசணி பழத் துண்டு ஆகியன வழங்கப்பட்டது.