ADDED : செப் 04, 2024 01:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை;உடுமலை அருகேயுள்ள கல்லாபுரத்தில், உடுமலை, குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, 131 பேருக்கு, ரூ.4.58 கோடி மதிப்பீட்டில் கலைஞரின் கனவு இல்ல திட்ட வீடுகளுக்கான ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன் தலைமை வகித்தார். எம்.பி.,ஈஸ்வரசாமி முன்னிலை வகித்தார். அமைச்சர் சாமிநாதன் பயனாளிகளுக்கு பணி ஆணைகளை வழங்கினார்.
முன்னதாக, கல்லாபுரத்தில், ஊரக வளர்ச்சித்துறை, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ், ரூ.21.60 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட நெல் குடோனை அமைச்சர் திறந்து வைத்தார்.