/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரயில்வே கூட்ெஷட் லாரி சங்க அலுவலகம் திறப்பு
/
ரயில்வே கூட்ெஷட் லாரி சங்க அலுவலகம் திறப்பு
ADDED : மார் 28, 2024 03:32 AM
திருப்பூர் : திருப்பூர் அருகே வஞ்சிபாளையத்தில் ரயில்வே கூட்ெஷட் லாரி வேன் உரிமையாளர்கள் சங்க அலுவலக திறப்பு விழா நடந்தது.
வஞ்சிபாளையம் ரயில்வே கூட்ெஷட் லாரி வேன் உரிமையாளர்கள் சங்க தலைவர் பாலதண்டபாணி வரவேற்றார். தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன மாநில தலைவர் தனராஜ், தலைமை வகித்து, சங்க அலுவலகம் திறந்து வைத்தார்.
மாநில செயலாளர் ராமசாமி, மாநில பொருளாளர் தாமோதரன், மேற்கு மண்டல துணைத் தலைவர் முருகேசன், மேற்கு மண்டல இணை செயலாளர் செல்வராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக, உழவர் உழைப்பாளர் கட்சியின் மாநில தலைவர் செல்லமுத்து பங்கேற்றார்.
சங்க துணைத் தலைவர் கனகரத்தினம், செயலாளர் கோபால்சாமி, துணை செயலாளர் பொன்னுசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். சங்க பொருளாளர் விஸ்வநாதன், நன்றி கூறினார். சூலுார், அவிநாசி, திருப்பூர் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள், சுமை துாக்கும் தொழிலாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.