/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம் நடத்துமாறு உத்தரவு
/
பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம் நடத்துமாறு உத்தரவு
பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம் நடத்துமாறு உத்தரவு
பள்ளியில் மேலாண்மை குழு கூட்டம் நடத்துமாறு உத்தரவு
ADDED : மே 03, 2024 11:14 PM
உடுமலை:பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படித்து பொதுத்தேர்வு எழுதாமல் விடுபட்டவர்களை கண்டறியவும், அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் மேலாண்மை குழு சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும்.
அதில், 'பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 ஒவ்வொரு பிரிவிலும் தேர்வுக்கு வராத மாணவர்கள், தற்போதைய நிலை என்ன, அவர்களுக்கு பள்ளிகளில் மீண்டும் வகுப்பு நடத்தி, போதிய பயிற்சி வழங்கி, துணைத்தேர்வு எழுத தயார்படுத்துவது, அதற்கேற்ப ஆசிரியர்களுக்கு பணி ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
பொதுத்தேர்வு முடிவு வெளியாகும் நாளில் துணைத்தேர்வுக்கான அட்டவணை, விண்ணப்பிக்கும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது. அதற்காக, தேர்வெழுதாத மாணவர் விபரம் சேகரிக்கப்பட்டு பயிற்சி வழங்குவதற்கான பணிகள் துவங்க தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.